
முன்னாள் காதலனை பழிவாங்க நாடகம்: கம்பி எண்ணும் காதலி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே சந்தோஷ் நகர் பகுதியில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்காரச் சம்பவத்தில், திடீர் திருப்பமாக, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
சந்தோஷ் நகர் பகுதியில் கடந்த செவ்வாயன்று, தன்னை தனது நண்பர் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரில், அது உண்மையல்ல என்பதும், வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துகொண்ட தனது முன்னாள் காதலனை பழிவாங்கவே, காதலி இந்த புகாரை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்
ஆட்டோ ஓட்டுநரும் மற்ற இரண்டு பேரும் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரினை அடுத்து, அங்குச் சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்த தடயமும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்தனர். அங்கிருந்த சிசிடிவியிலும் எதுவும் பதிவாகவில்லை. பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, காவல்துறையினர், புகார் அளித்த பெண்ணிடம் உரிய முறையில் விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்ததால், அவரைப் பழிவாங்கவே இப்படி புகார் அளித்ததாகக் கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...