
கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,575 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,575 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 64,20,510 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,914 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 145 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 17,106 பேருக்கு கரோனா
இதுவரை மொத்தம் 62,27,219 பேர் குணமடைந்துள்ளனர். 1,35,817 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 53,967 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைவோர் விகிதம் 96.99 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.11 சதவிகிதம்.