
கோப்புப்படம்
நாட்டில் இதுவரை இதுவரை 58 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இகுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 58 கோடிக்கும் அதிகமானோருக்கு (58,08,57,505) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 43 லட்சத்திற்கும் அதிகமான (43,92,759) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
18-44 வயது பிரிவில் 20,88,547 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 7,36,870 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 21,60,58,123 பேர் முதல் டோஸையும், 1,92,54,925 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 11748466 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 1105070 நபர்கள் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 300907 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 10140 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.