முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் இன்று திமுகவில் இணைந்தனர்.  
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் இன்று திமுகவில் இணைந்தனர். 
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எ.வி, சாரதி தலைமையில் ஆற்காடு நகர மாவட்டபிரதிநிதி என். கண்ணன், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் சி. தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் எம். கமலஹாசன், 6வது வார்டு பிரதிநிதி எ.டி.எஸ். சுரேஷ், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் எ.டி.எஸ். ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர் டி. ராஜ்குமார், 6வது வட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம். தங்கராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே.கே. சண்முகம், 16வது வார்டு இளைஞர் அணி செயலாளர் என். ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் டி. உமாபதி, கே. கார்த்திகேயன், ஜெ. ஜெயராஜ், எம். மணிவண்ணன், சி. நடராஜன், எம். மதன்ராஜ், எம். ஹரி, எஸ். பாலமுருகன், டி.எஸ். சிவா, எஸ். ராஜேஷ், ஆர். ஜெகன், கே. முரளிதரன் நாம் தமிழர் கட்சி முன்னாள் நகர செயலாளர் ஜெ. துரைமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி திமிரி ஒன்றிய செயலாளர் டி. பாபு  மற்றும் 20க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். 

இந்நிகழ்வின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,  துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com