
ஆப்கானிஸ்தானில் அரசை அமைக்கும் வகையில் தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலுக்கு இன்று வந்தடைந்தார். அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க அவர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் ஒருவரான கலில் ஹக்கானியும் காபூலில் வசித்துவருகிறார். தலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரான இவரை பிடித்து தருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | தலிபான்களால் பிடிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: அரசு தகவல்
அரசியல் தலைவர்களில் ஒருவரான குல்புதீன் ஹேக்மத்யாரை ஹக்கானி சந்தித்து பேசியதாக தலிபான் ஆதரவு பக்கம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் 1990களில் குல்புதீன் ஹேக்மத்யா, ஹக்கானி ஆகியோருக்கிடையே பகைமை நீடித்துவந்தது. அரசை அமைக்கும் நோக்கில் தற்போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முல்லா பராதர், போராளிக் குழு தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசி அனைவருக்குமான அரசை அமைப்பார் என தலிபான் மூத்த தலைவர் ஒருவர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.