மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தலிபான்களால் பிடிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: அரசு தகவல்

தலிபான்களால் பிடித்துவைக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஆகஸ்ட் 2021, 8:02 am

தலிபான்களால் பிடித்துவைக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய வாயிலில் காத்துக்கொண்டிருந்த 150 இந்தியர்களை தலிபான்கள்  பிடித்துவைத்துள்ளனர் என தகவல் வெளியானது. இதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அருகிலிருக்கும் காவல்நிலையத்தில், இந்தியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்திலிருந்து 150 பேர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளதாகவுல் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும் உள்ளூர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. 

C-130J என்ற இந்திய விமானப்படையின் விமானம் மூலம் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், கடத்தல் குறித்த செய்தி வெளியாகியிருந்தது. C-130J விமானம் பாதுகாப்பாக தஜிகிஸ்தானின் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த கட்ட மீட்பு பணிகளுக்காக C-17 விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில் அவர்கள் அனைவரையும் காபூல் விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இந்திய அரசின் உயர்மட்ட அலுவலர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.