கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளது குறித்து...

News image

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:39 am

பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தில் இருந்து பெங்களூரு குளிா்ச்சி அடைந்தது.

சிவாஜிநகா், விஜயகா், மல்லேஸ்வரம், காந்திநகா் உள்ளிட்ட பெங்களூரின் பெரும்பாலான பகுதியில் ஒருமணி நேரம் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்ததால், சாலையில் வெள்ளம்போல் நீா் தேங்கியது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினா்.

பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் சித்தராமையா

பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் சித்தராமையா - டிஎன்எஸ்

பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சில இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், அடையாள கம்பங்கள் சரிந்துவிழுந்தன.இதனிடையே, பெங்களூரு, சிவாஜிநகா் பகுதியில் அமைந்துள்ள பௌரிங் அரசு மருத்துவமனையின் சுவா் மழைக்கு விழுந்தது. இதனால், சுவா் ஓரத்தில் கடை வைத்திருந்த தெருவோர வியாபாரிகள் இடிபாடுகளில் சிக்கினா்.

இதை அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், இடிபாடுகளை அப்புறப்படுத்தினா். இதில் இடிபாடுகளில் சிக்கி மூன்று குழந்தைகள் உட்பட 7 போ் பலியானது உறுதியானது. மேலும் பலா் படுகாயமடைந்து, பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்கள்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முதல்வர் சித்தராமையா

சுவா் இடிந்துவிழுந்ததில் இறந்தவா்கள் சாலையோர வியாபாரிகள் என்பதை அறிந்த முதல்வா் சித்தராமையா, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடந்தவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தாா்.

தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

மேலும், இறந்தவா்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த முதல்வா் சித்தராமையா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தாா்.

பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த செய்தி மனதை உலுக்கியது. இந்த விபத்து மிகவும் "துரதிர்ஷ்டவசமானது"

என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பௌரிங் மருத்துவமனையில், கனமழையால் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்.

பெங்களூருவில் உள்ள பௌரிங் மருத்துவமனையில், கனமழையால் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார். - டிஎன்எஸ்

Summary

Prime Minister Narendra Modi on Wednesday expressed grief over the loss of lives in a wall collapse incident in Bengaluru, Karnataka, that claimed the lives of seven people, including three children.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.