
(கோப்புப்படம்)
தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து 85 இந்தியர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சொந்த நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு உள்ள வெளிநாட்டவர்களின் நிலை கவலைக்குள்ளாகியுள்ளது. தலைநகர் காபூலிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட இந்திய விமானப் படை சி-130ஜே ரக விமானத்தின் மூலம் காபூலில் இருந்த 85 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
மேலும் காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்த அமெரிக்கா திணறல்
முன்னதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி காபூலில் இருந்து 129 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.