தில்லியில் 13-வது நாளாக கரோனா பலி இல்லை: புதிதாக 17 பேர் பாதிப்பு

நாட்டின் தலைநகரான தில்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தில்லியில் கரோனா உயிரிழப்பு இல்லை
தில்லியில் கரோனா உயிரிழப்பு இல்லை

நாட்டின் தலைநகரான தில்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த 13 நாள்களாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றிலிருந்து 41 பேர் புதிதாக குணமடைந்தனர். 

தற்போது தில்லியில் 374 பேர் மட்டுமே கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தில்லியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,37,334-ஆக உள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 14,11,881-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. இன்று கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,079-ஆக உள்ளது. 

தில்லியில் கடந்த ஜூலை 18, 24, ஆகஸ்ட் 2, 4, 8, 11, 12, 13, 16, 20, 21,22 ஆகிய தேதிகளில் கரோனா நோய்த் தொற்றால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com