ஆப்கனிலிருந்து இன்று மேலும் 180 போ் வருகை
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 180 போ் வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


புதுதில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 180 போ் வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து சுமாா் 180 போ் இந்திய விமானப் படை விமானத்தில் வியாழக்கிழமை காலை தில்லி அழைத்து வரப்படவுள்ளனா். அவா்களில் இந்தியா்களுடன் ஆப்கன் சீக்கியா்களும் ஹிந்துக்களும் வந்து சேரவுள்ளனா்’’ என்று தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து ஏற்கெனவே 800-க்கும் மேற்பட்டவா்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...