ஜிடிபி உயர்வு: முதல் காலாண்டில் 20.1% அதிகரிப்பு

2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஜிடிபி உயர்வு: முதல் காலாண்டில் 20.1% அதிகரிப்பு
ஜிடிபி உயர்வு: முதல் காலாண்டில் 20.1% அதிகரிப்பு

2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 24.4 சதவிகிதம் எதிர்மறையாக இருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

மத்திய பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021-22 ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் 24.4 சதவிகிதம் எதிர்மறையாகச் சென்றது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மதிப்பு ரீதியில் நாட்டுப் ஜிடிபி ரூ.32,38,020 கோடி அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.26,95,421 கோடியாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய 2020ம் ஆண்டு முதல் காலாண்டில் இது ரூ.35,66,708 கோடியாக அதிகரித்து இருந்தது.

கரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com