பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

​12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை (வியாழக்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:25 am

DIN


12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை (வியாழக்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 3-ம் நாளான புதன்கிழமை காலை மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்முறை ஒத்திவைத்து, பிறகு அவை கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து எழுப்பினார். ஆனால், இந்த விவகாரம் நேற்றே (செவ்வாய்க்கிழமை) விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதால், அதுகுறித்து பேச அனுமதிக்க மறுக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் தொடர் அமளி காரணமாக அவை நாளை (வியாழக்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.