தில்லி வந்தார் ரஷிய அதிபர் புதின்: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
தில்லி வந்தார் ரஷிய அதிபர் புதின்: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவிற்கு வந்தடைந்தார்.

அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அவர், தில்லியில் வந்திறங்கினார்.  இதனை அடுத்து அவர் ஹைதராபாத் இல்லத்திற்குச் செல்ல இருக்கிறார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு உச்சிமாநாடு நடக்காத நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கும் இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடு தில்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இரு நாடுகளிடையேயான உறவு குறித்து தலைவா்கள் மறு ஆய்வு செய்ய உள்ளதோடு, இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கடந்த 2019 -ஆம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com