தெலங்கானா: 4 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

தெலங்கானாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானா: 4 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
தெலங்கானா: 4 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

தெலங்கானாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்துதலை ஏற்படுத்தி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் , தெலங்கானாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தன்னிரு தெரிவித்திருக்கிறார்.

கடந்த அக்.30 ஆம் தேதி வரை 3 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில் அடுத்த 48 நாள்களில் 1 கோடி தடுப்பூசி என்கிற புதிய இலக்கை அடைந்திருக்கிறார்கள்.

இதில் அம்மாநில மக்கள் தொகையில் 94 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் 50 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக , கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் முதல் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்திய மாநிலமாக தெலங்கானா இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com