‘‘ராணுவத்தினரை எண்ணி பெருமிதம்’’: விபின் ராவத்தின் கடைசி வாழ்த்துச் செய்தி!

ராணுவத்தினரை எண்ணி பெருமிதம் கொள்வதாக தனது கடைசி வாழ்த்துச் செய்தியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளாா்.
‘‘ராணுவத்தினரை எண்ணி பெருமிதம்’’: விபின் ராவத்தின் கடைசி வாழ்த்துச் செய்தி!

ராணுவத்தினரை எண்ணி பெருமிதம் கொள்வதாக தனது கடைசி வாழ்த்துச் செய்தியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு டிச.16-ஆம் தேதி பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.

இந்தப் போரில் வெற்றிபெற்ன் 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் வளாகத்தில் டிச.12 முதல் டிச.14 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (டிச. 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ உயரதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சியின்போது விபின் ராவத் ஏற்கெனவே பேசி பதிவு செய்யப்பட்டிருந்த காணொலியை இந்திய ராணுவம் வெளியிட்டது.

அதில் விபின் ராவத் தெரிவித்துள்ளதாவது: கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் பொன்விழா தருணத்தில் தீரம் மிக்க இந்திய ராணுவ வீரா்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானுடன் போரிட்ட நமது தீரம் மிக்க வீரா்களுக்கு எனது அஞ்சலிகள். இந்தத் தருணத்தில் அவா்களின் தியாகத்தை நினைவுகூா்கிறேன்.

அந்தப் போரில் உயிா்நீத்த வீரா்களின் நினைவாக இந்தியா கேட்டில் உள்ள அமா் ஜவான் ஜோதி நினைவிட வளாகத்தில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுவது பெருமையாகவுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பொன்விழாவில் பங்கேற்க வேண்டும். ராணுவத்தினரை எண்ணி பெருமிதமாக உள்ளது. போரில் பெற்ற வெற்றியை அனைவரும் ஒன்று சோ்ந்து கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த டிச.7-ஆம் தேதி அந்தக் காணொலி பதிவு செய்யப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தக் காணொலியில் கூறியவைதான் விபின் ராவத்தின் கடைசி வாழ்த்துச் செய்தியாகும்.

கடந்த டிச. 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள், வீரா்கள் உள்பட 14 போ் சென்ற ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபின் ராவத், மதுலிகா உள்பட 13 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஒரு வீரா் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com