பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஞாயிற்றுக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. பிட்காயின் முறையை அதிகாரப்பூர்வமாக இந்தியா ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 7,774 பேருக்கு கரோனா
இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளித்தது. இந்த விவகாரம் ட்விட்டர் நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அது சரிசெய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. மேலும், பதிவிடப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.