அரசின் சலுகைகளுக்காக தங்கையையே திருமணம் செய்து கொண்ட அண்ணன்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, அண்ணனே தனது தங்கையை திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசின் சலுகைகளுக்காக தங்கையையே திருமணம் செய்து கொண்ட அண்ணன்
அரசின் சலுகைகளுக்காக தங்கையையே திருமணம் செய்து கொண்ட அண்ணன்


பிரோஸாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, அண்ணனே தனது தங்கையை திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற முக்கியமந்திரி சமூக திருமண திட்டத்தின் கீழ், ஏராளமானோருக்கு ஒரே இடத்தில் பிரம்மாண்டமான விழாவில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

இந்த திருமணத் திட்டத்தின் கீழ், மணமுடிக்கும் மணமக்களுக்கு தலா ரூ.35,000 பணம், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் வழங்கப்படும். மணமக்களின் வங்கிக் கணக்கில் ரூ.20 ஆயிரம் வைப்பு வைக்கப்படும். மேலும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுபொருள்கள் வழங்கப்படுவது வழக்கம்.

பிரோஸாபாத்தின் துண்ட்லா பகுதியில் டிசம்பர் 11ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளூர் மக்கள், இந்த மணமக்களைப் பார்த்ததுமே, இவர்கள் அண்ணன் - தங்கை என்பதை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர்.

இதன் மூலம், சுமார் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசின் சலுகைகளைப் பெற, அண்ணன், தங்கையை திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com