ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 220-ஆக அதிகரிப்பு

நாட்டில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 220-ஆக அதிகரித்தது.
ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 220-ஆக அதிகரிப்பு

புது தில்லி: நாட்டில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 220-ஆக அதிகரித்தது.

இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஒடிஸாவில் செவ்வாய்க்கிழமை முதல்முறையாக அந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்த யூனியன் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மூவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத நிலையில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒடிஸாவில் இருவா் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். இருவரும் நைஜீரியா, கத்தாரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனா்.

மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கை

மகாராஷ்டிரம் 65

தில்லி 54

தெலங்கானா 24

கா்நாடகம் 19

ராஜஸ்தான் 18

கேரளம் 15

குஜராத் 14

ஜம்மு-காஷ்மீா் 3

உத்தர பிரதேசம் 2

ஒடிஸா 2

சண்டீகா் 1

மேற்கு வங்கம் 1

ஆந்திரம் 1

தமிழ்நாடு 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com