கோப்புப்படம்
கோப்புப்படம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை: தில்லி அரசு

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தில்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Published on

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தில்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வரும் பகுதிகளில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனா அதிகம் பரவக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு கரோனா வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை துணை ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே தில்லியில்தான் அதிகளவாக 57 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com