

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இரண்டாம் மாடியில் உள்ள கழிவறையில் குண்டுவெடித்ததில் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கள் தெரிவித்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த நால்வர் விரைவில் குணமடைய விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், "பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க சிலர் நினைக்கின்றனர். பஞ்சாபின் மூன்று கோடி மக்கள் அவர்களின் திட்டங்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டார்கள். நாம் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்து கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் விழைகிறேன்" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.
மதியம் 12:22 மணி அளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கழிவறையின் சுவர்கள் மற்றும் அருகே உள்ள அறைகளின் கண்ணாடி பலகைகள் சுக்கு நூறாக நொறுங்கும் அளவுக்கு குண்டுவெடிப்பின் தீவிரம் இருந்துள்ளது. போலீசார் அப்பகுதிக்கு சீல் வைத்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.