ஒமைக்ரான் லேசான தொற்று, ஆக்ஸிஜன் தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா

ஒமைக்ரான் ஒரு லேசான தொற்று மற்றும் அதிக ஆக்ஸிஜன் தேவைப்படாது. மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என  எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 
ஒமைக்ரான் லேசான தொற்று, ஆக்ஸிஜன் தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா

புதுதில்லி: ஒமைக்ரான் ஒரு லேசான தொற்று மற்றும் அதிகயளவு ஆக்ஸிஜன் தேவைப்படாது. மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என  எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

நாட்டில் புதிதாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் கரோனாவின் மூன்றாவது அலை ஆபத்தானதாக இருக்கும் என பல மாத அமைதிக்குப் பிறகு, மக்கள் மீண்டும் தொற்று அச்சத்தில் உள்ளனர். 

இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு விடியோவில், ஒமைக்ரான் தொற்றை நினைத்து மக்கள் தேவையற்ற அச்சம் மற்றும் பயத்தை தவிர்க்குமாறு எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார். 

தற்போதைய தரவுகளின்படி ஒமிக்ரான் லேசான தொற்று நோய் என்பதால் ஆக்ஸிஜனின் தேவையின் அளவு அதிகமாக இருக்காது. மேலும் டெல்டா பாதிப்பை போன்று, ஒமைக்ரான் பாதிப்பவர்களுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படாது. எனவே, அனைவரும் "ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளை சேமிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," 

தனிப்பட்ட ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கருத்தில் கொண்டு ஒமைக்ரானை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயாராக வேண்டும் என வலியுறுத்தியவர், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாலும், இயற்கையாகவே இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான சக்தியை பெற்றுள்ளதன் காரணமாக, ஒமைக்ரானை நினைத்து மக்கள் அச்சமடைய வேண்டாம். அதே நேரம் மத்திய, மாநில அரசு வலியுறுத்தியுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் கவனத்தில் கொண்டு கவனமாக இருங்கள். மேலும், மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணிய மறக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com