கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 58 உள்ளாட்சி அமைப்புகளில் 1,184 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

வாக்கெண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் 498 வார்டுகள், பாரதிய ஜனதா 437 வார்டுகள் ஜனதா தளம் 45 வார்டுகள், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 204 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் 42.06 சதவீதம், பாஜக 36.90 சதவீத, பிற கட்சிகள் 21 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இருப்பினும், மொத்தமுள்ள 166 நகராட்சி வார்டுகளில் பாஜக 67 இடங்களும், காங்கிரஸ் 61 இடங்களும் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com