
புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் ஜனவரி 31 வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புதுச்சேரி முழுவதும் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை டிசம்பர் 31 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்.
இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்று(டிச.31) மற்றும் நாளை(ஜன.1) மட்டும் இரவு 12.30 மணிவரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெற அறிவுறுத்தப்படுகிறது.
இன்றும், நாளையும் இரவு 12.30 முதல் அதிகாலை 2 மணிமுதல் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.