
2022-ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மகிழ்ச்சிகரமான புத்தாண்டான 2022-ல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க - நாளை முதல் 41 ரயில்களில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு
புத்தாண்டின் புதிய உதயத்தில், நம் அனைவரது வாழ்விலும் அமைதி, முன்னேற்றம், சகோதரத்துவம் ஆகியவற்றின் எழுச்சி புத்துயிர் பெறட்டும். நமது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள புத்தாண்டில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.
புத்தாண்டான 2022, உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...