
கோப்புப்படம்
நாளை முதல் 41 ரயில்களில் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயன்பாடு முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாகவும் மாற்றப்பட்டிருந்தது.
இதையும் படிக்க| மழைநீர் தேங்குவதை நிச்சயம் சரிசெய்வோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
இந்த நிலையில் ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முன் வந்துள்ளது.
அதன்படி, 39 ரயில்களில் நாளை புத்தாண்டு நாளான் சனிக்கிழமை(ஜன.1) முதலும், பரசுராம் விரைவு ரயிலில் 4 ஆம் தேதி முதல் என மொத்தம் 41 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயன்பாட்டு முறை பயன்பாட்டிற்கு வருகிறது.
இதையும் படிக்க| ரூ.2,60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில்களில் தலா 2 பெட்டிகள் நாளை சனிக்கிழமை(ஜன.1) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக பயன்பாட்டில் இருக்கும்.
மங்களூர்-நாகர்கோவில், நாகர்கோவில்-மங்களூர் பரசுராம் விரைவு ரயிலில் 4 ஆம் தேதி முதல் 2 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். மங்களூர் சென்ட்ரல்- நாகர்கோவில், நாகர்கோவில்- மங்களூர் சென்ட்ரல் ஏரநாடு விரைவு ரயில்களில் தலா 2 பெட்டிகளும், நாகர்கோவில்-கோட்டயம் பயணிகள் ரயிலில் 2 பெட்டிகளும், நாகர்கோவில்- கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-நாகர்கோவில் விரைவு ரயிலில் தலா 2 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக நாளை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டில் வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.