
ஜார்க்கண்ட்: திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிட்டது.
கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனா தொற்று நிலைகளுக்கேற்ப தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரையரங்குகளில் 50% பாா்வையாளா்களுக்கு அனுமதி அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.