கடந்த 10 நாள்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10.5% அதிகரிப்பு

நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளின் பலனாக கடந்த நவம்பர் இறுதியில் கரோனா நோயாளிகள்
கடந்த 10 நாள்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10.5% அதிகரிப்பு
கடந்த 10 நாள்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10.5% அதிகரிப்பு


நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளின் பலனாக கடந்த நவம்பர் இறுதியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்லக் குறையத் தொடங்கியிருந்த நிலையில், கடந்த 5 நாள்களாக இந்த நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக் குறையத் தொடங்கியதும், கரோனா பரவாமல் தடுகக்க பொதுமக்கள் இதுவரை கையாண்டு வந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டதும், பழைய நிலைமைக்கு முழுவதும் திரும்பி விட்டதாகக் கருதுவதுமே காரணமா அல்லது புதிய வகை கரோனா பரவி வருவது காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிப்ரவரி 11-ஆம் தேதி நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,33,079 ஆக இருந்த நிலையில், இது 2020ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. ஆனால் அது 10 நாள்கள் கூட நீடிக்கவில்லை, பிப்ரவரி 21-ஆம் தேதி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,47,156 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 10 நாள்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கரோனா நோயாளிகளில் 74 சதவீதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்காளக இருக்கிறார்கள். அதே வேளையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரிப்பில் சத்தீஸ்கரும், மத்தியப் பிரதேசமும் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப்பிலும், ஜம்மு - காஷ்மீரிலும் கூட நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் மூலம் இந்தியாவில் இரண்டாவது அலை வீசக் கூடும் என்ற அச்சமும், இது அதற்கான அறிகுறியே என்றும் நிபுணர்கள் கூறி வந்தாலும், உடனடியாக மக்கள் பழையபடி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை தீவிரமாகக் கடைப்பிடித்தால் நிச்சயம் அதிலிருந்து தப்புவிக்க முடியும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com