
ஹரியாணா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் லவ் ஜிகாத் மசோதா தாக்கல் செய்யப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காக லவ் ஜிகாத் எனும் சட்டத்தை நிறைவேற்ற பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் லவ் ஜிகாத் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பேசிய அமைச்சர் அனில் விஜ், “நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் லவ் ஜிகாத் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான வரைவு தயாரிக்கும்பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் இரண்டு மாநிலங்கள் ஏற்கெனவே இதேபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...