
கர்நாடகத்தில் பேருந்துகள் மூலம் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வடகிழக்கு கர்நாடகத்தின் ஜில்லா பஞ்சாயத்துடன் சாலைப்போக்குவரத்துத் துறை மற்றும் கல்வித்துறை இணைந்து பேருந்துகளை நடமாடும் நூலகமாக மாற்றியுள்ளன.
இதில் 4 ஆயிரம் புத்தகங்கள், 100 வார, மாத இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் முக்காலிகள் அமைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கிராமப் புறங்களிலுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த நடமாடும் நூலகப் பேருந்து, கலாபுர்கி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்கிறது.
கிராமங்களிலுள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த நடமாடும் நூலகப் பேருந்து செல்கிறது. கிராமப் புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேருந்துகளில் நூலகம் அமைத்ததாக வடகிழக்கு கர்நாடக சாலைப்போக்குவரத்துத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.