வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்: உச்ச நீதிமன்றம்
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்: உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வரும் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே.. 1972-இல் எம்.ஜி.ஆா்.; 2021-இல் ரஜினி?

அதில், வேளாண் சட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது எதிர்ப்புகளை குழுவிடம் சொல்லட்டும், அந்த குழுவின் பரிந்துரைகளை நாம் ஏற்கலாம்.

கடுமையான குளிரியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தரப்பில் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 

தில்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம், அவர்களுக்கு போதிய உணவும், குடிநீரும் கிடைக்கிறதா? என்று கவலை அடைகிறோம்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என்று கூறி ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், நாங்கள் பொருளாதாரத்தில் வல்லுநர்கள் இல்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியுமா என்பதை சொல்லுங்கள், இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

வேளாண் சட்டங்களை நிறுத்த முடியாது: மத்திய அரசு
புது தில்லி: புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com