வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வாயிலில் கைகளில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற சாலைகளில் ஊர்வலமாக வந்தனர்.
நடப்பாண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டம் குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைப் புரியும்போது இடது சாரி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் திரண்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி சட்டமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நாடாளுமன்ற வாயிலில் பதாகைகளை ஏந்தி நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


