நாட்டில் 1.04 கோடி போ் கரோனாவிலிருந்து குணம்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,04,09,160 போ் குணமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கரோனா


புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,04,09,160 போ் குணமடைந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன் பாதிப்பிலிருந்து மீள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,33,131 -ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 14,808 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,09,160-ஆக அதிகரித்தது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 137 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,147-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,69,824 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

புதிதாக ஏற்பட்ட 137 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், தில்லி, உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19,58,37,408 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 7,56,329 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com