சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், ஜோரடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (24)). இவா் வியாழக்கிழமை ஜோரடி கிராமத்திலிருந்து சிவமொக்காவுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். ஆயனூா் கிராமத்தின் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிவமொக்கா ஊரக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.