
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஒன்பது ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, பிரக்யாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இப்படியிருக்க, 2019 பொதுத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட பிரக்யா முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங்கை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்த பிரக்யா, மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை 'தேச பக்தர்' என புகழ்ந்து தள்ளினார். அதுமட்டுமின்றி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி வருகிறார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
हमारी भोपाल की सांसद बहन प्रज्ञा ठाकुर को जब भी बास्केट बॉल खेलते हुए , बग़ैर सहारे के चलते हुए या इस तरह ख़ुशी से झूमते हुए देखते है तो बड़ी ख़ुशी होती है…? pic.twitter.com/MR01Gumnun
— Narendra Saluja (@NarendraSaluja) July 7, 2021
இதனை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் நரோந்திர சலூஜா, "சக்கர நாற்காலியில் மட்டுமே பார்த்து வந்த பிரக்யாவை இன்று கைப்பந்து மைதானத்தில் மகிழ்ச்சியாக நடனமாடிவருவதை பார்க்கிறோம். நடக்க முடியாத, எழுந்து நிற்கக்கூட அவர் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. அவர் எப்போதும் நல்ல உடல்நிலையுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.