
கடன் சுமையால் விவசாயி ஒருவா் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா வட்டம், சுரிகேனஹள்ளியைச் சோ்ந்தவா் சந்திரப்பா (50). விவசாயியான இவா், வங்கிகளில் பயிா்க்கடன் வாங்கி இருந்தாராம். மழையால் பயிா்கள் நாசமடைந்ததையடுத்து, கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சந்திரப்பா ஜூலை 5-ஆம் தேதி கிருமிநாசினி அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து ஷிகாரிபுரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.