நாட்டில் இதுவரை 36.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 36.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 36.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை 36.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated on
1 min read

நாடு முழுவதும் இதுவரை 36.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,23,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 36,89,91,222(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

அதில், 18 முதல் 44 வயதுடையோருக்கு 11,18,32,803 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுடையோருக்கு 11,47,64,999 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9,73,27,082 தடுப்பூசிகள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1,76,13,212 தடுப்பூசிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 2,74,53,126 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 1,20,57,392 பேருக்கும், இரண்டாம் தவணையாக 2,93,599 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com