மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா: இந்தியா பதிலடி

ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டியதன் மூலம் அடைந்த சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் 27ஆம் தேதி, இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார். அப்போது, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் டீன் தொம்சன் இதுகுறித்து கூறுகையில், "இந்த பயணத்தின்போது மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பான விவகாரங்களை பிளிங்கன் எழுப்புவார்" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தரப்பில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பான விவகாரங்கள் ஒரு குறிப்பிட்ட தேசம், கலாசாரத்தை தாண்டி உலகளாவிய பிரச்னைகளாக பார்க்கப்படுகிறது.

இவ்விரண்டு விவகாரங்களிலும் சாதனை படைத்திருப்பதை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. இது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்விதில் மகிழ்ச்சி கொள்கிறது. நீண்ட காலமாக, பன்மைச் சமூகமாக திகழும் இந்தியா, தங்களின் வேற்றுமை விழுமியங்களை அங்கீகரிக்கும் நாடுகளிடம் பேச்சவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

உண்மையான பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய ஜனநாயக உலக ஒழுங்குக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். இந்த பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் சர்வதேச நாடுகளிடம் பேச்சவார்த்தை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். காலநிலை மாற்றம், சர்வதேச நலனுக்காக முடிவுகளை எடுப்பது போன்றவற்றில் சமத்துவத்தையும் நேர்மையையும் கோருகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com