
இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்திம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | நாட்டில் புதிதாக 43,654 பேருக்கு தொற்று: 640 பேர் உயிரிழந்தனர்
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், நேற்று மாலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதத்தை கிழித்தெறிந்ததற்காக ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் 11.30 மணிவரை அவை ஒத்திவைக்கபடுபதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பெட்ரோல் விலை உயர்வு: நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.
அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி அவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் அவையை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.