பெட்ரோல் விலை உயர்வு: நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்திற்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரிபுன் போரா, பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சைக்கிளில் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடன் பேசிய அவர், “பெட்ரோல் மற்றும் பிற பொருள்களின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வேறு எங்கு விவாதிப்பது?” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com