
குஜராத்தில் கார் - டிரக் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி
ஆனந்த்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர்.
ஆனந்த் மாவட்டம் இந்திரானஜ் கிராமத்துக்கு அருகே, காரும், எதிரே வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 10 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது
ஆனந்த் மாவட்டத்தின் தாராபூர் - அகமது மாவட்டம் வடமான் பகுதியை இணைக்குமிடத்தில் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மிக வேகமாக வந்த டிரக், கார் மீது மோதியதில், காரில் இருந்த குழந்தை உள்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் இருக்கும் உடல்களை மீட்டு அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.