சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது

புதன்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7464 ஆகக் குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1 சதவீதமாகும்.
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது

புதன்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7464 ஆகக் குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1 சதவீதமாகும்.

அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தலா 800க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகரில் மட்டும் 805 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 53 ஆயிரம் பேரும், கோடம்பாக்கத்தில் 50 ஆயிரம் பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் கரோனாவுக்கு 920 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில், சுமாா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 26,614-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், 5 லட்சத்து 11,274 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 7,646 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,876 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com