‘ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளோம்’: அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தில்லி பிரதமர் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

ஜம்மு-காஷ்மீர் குறித்த இன்றைய ஆலோசனைக் கூட்டம் மிகவும் நல்ல சூழலில் நடத்தப்பட்டது. பங்குபெற்ற அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தினார்கள். ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக வழிமுறையை வலுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து விதமான வளர்ச்சியையும் உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மறுவரையறை மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது முக்கிய பணிகள் எனத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com