பிரமருடன் நடைபெற்ற கூட்டத்தில் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி பிரதமர் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது,
கூட்டத்தில் 5 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டப்பேரவைத் தேர்தல், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு, அரசியல் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் மற்றும் குடியேற்ற விதிகள் ஆகியவை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். மேலும், கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தலைவர்களும் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம் எனத் தெரிவித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
தில்லியில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


