
கோப்புப்படம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நாய் கடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் நாயின் உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் ஸ்ரீகிருஷ்ணா நகரில் வசித்து வரும் மருத்துவர் சங்கீதா விஜய் பால்கோட் என்பர் வளர்த்து வந்த நாய், 9 வயது சிறுவனை கடித்துள்ளது.
இதில் காயமடைந்த சிறுவனின் தாயார் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நாக்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாய் கடித்ததில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்றளவும் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிமன்றம், இதனால் நாயின் உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெறப்படும் ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையினை பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.