
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகைக்கு பிறகு கிராம சபைக் கூட்டங்களை நடத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவ்நத வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் முதல் கிராம்சபைக் கூட்டங்களுக்கான பணிகள் தொடரும் என்றும், 5 மாவட்டங்களில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசோக் சிங் தெரிவித்துள்ளார்.
வடக்கு உத்தரப் பிரதேசத்தில் புகழ் பெற்ற புரி ஜெகன்னாதர் கோயிலிலும் அவர் தரிசனம் செய்யவுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, சோன்பத்ரா, கோரக்பூர், மிர்சாபூர், அலகாபாத் ஆகிய பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...