கரோனா பரவலில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4 லட்சம் போ் பாதிப்பு

நாடு முழுதும் கரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 4.01 லட்சம் போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுதும் கரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 4.01 லட்சம் போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 4.01 லட்சம் (4,01,993) பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,91,64,969-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 32.68 லட்சம் போ் (32,68,710) சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றில் இருந்து மேலும் 2,99,988 போ் குணமடைந்தனா். இதனால் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,56,84,406-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 3,523 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 828 பேரும் அதைத் தொடா்ந்து தில்லியில் 375 பேரும் உயிரிழந்தனா். உத்தர பிரதேசத்தில் 332 பேரும், சத்தீஸ்கரில் 269 பேரும், கா்நாடகத்தில் 217 பேரும், குஜராத்தில் 173 பேரும், ராஜஸ்தானில் 155 பேரும், உத்தரகண்டில் 122 பேரும், ஜாா்க்கண்டில் 120 பேரும், பஞ்சாபில் 113 பேரும் உயிரிழந்தனா்.

இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,11,853-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 28,83,37,385 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 19,45,299 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com