

தொடுப்புழா பகுதியில் செங்கம் என்ற இடத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு பேர் கரோனாவுக்கு பலியாக, அதில் பங்கேற்ற 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிச்சயதார்த்தத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என 150 பேர் பங்கேற்றனர். வயதானவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மிகப்பெரிய நிகழ்ச்சி அரங்கில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். மகள் நிச்சயதார்த்தத்துக்காக இந்தியா வந்துள்ளனர்.
ஏப்ரல் 19ல் நிச்சயதார்த்தமும், ஏப்ரல் 22ல் எட்டுமனூர் பகுதியில் திருமணமும் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பிறகு, அதில் பங்கேற்ற சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட அவர்கள் கரோனா பரிசோதனை செய்ததில், ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கரோனா உறுதி சய்யப்பட்டது. அவர்களில் சிலர் தற்போதும் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து உரிய முன் அனுமதி பெறப்படவில்லை என்கிறார் அப்பகுதி வார்டு கவுன்சிலர்.
இதில், மணப்பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். வெளிநாட்டிலிருந்து வரும் போது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு இந்தியா வந்தவர்களுக்கும், இங்கு வந்து கரோனா உறுதியாகியுள்ளது.
இவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறிந்து அனைவருக்கும் சோதனை நடத்துவது என்பது இயலாத காரியம், எனவே, அவர்களே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அந்தமாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.