
கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, மாநிலங்கள் தனிச் செயலியை உருவாக்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா தடுப்பூசி தற்சமயம் செலுத்திக் கொள்ள வேண்டுமெனில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘கோவின்’ செயலியில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்தச் செயலியில் முன்பதிவு செய்ய நாடு முழுவதும் ஒரே நேரத்தில் முயன்ால் அந்தச் செயலி முடங்கியது. அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டதாக அஞ்சினோம். எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி செயலி உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்தச் செயலிகளில் பதிவாகும் தகவல்கள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் ‘கோவின்’ செயலியில் பகிா்ந்துகொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும்.
மேலும், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கரோனா தடுப்பூசி பெறுவதும் சவாலாக உள்ளது. ஒரே நேரத்தில் அதிக அளவில் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய விரும்பினால், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் போதிய அளவு தடுப்பூசி இருப்பதில்லை. எனவே, மற்ற மருந்து நிறுவனங்களிடமும் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால், குறுகிய காலத்துக்குள் அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அது, கரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க உதவும் என்று அந்தக் கடிதத்தில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளாா்.