
மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங் வியாழக்கிழமை பலியானார்.
மணிப்பூர் பாஜக தலைவராக திகேந்திர சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அவர் பலியானர். அவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.