கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்

தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து போராட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான பேரணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினத்தை கருப்பு நாளாக அறிவித்து விவசாயிகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கருப்புக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தில்லி எல்லையான டிக்ரி, காஸிப்பூர், சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோன்று உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான பேரணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com